15 மில்லியன் ரூபாவிற்கும் கூடுதலான பெறுமதியுடைய 24 தங்க பிஸ்கட்டுக்களுடன் மூன்று பேர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். நேற்றிரவு 10.50 மணியளவில் மும்பையில் இருந்து வருகை தந்த 144 ரக விமானத்தில் வருகை தந்த கண்டியை சேர்ந்த 46, 45, 47 வயதுகளை உடைய 3 வர்த்தகர்கள் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். தமது பயணப்பைகளில் மிகவும் நுணுக்கமான முறையில் இந்த தங்க பிஸ்கட்டுக்கள் எடுத்துவரப்பட்டிருந்தன. இதன் எடை 2.3 கிலோ கிராம்கள் ஆகும். இதன் பெறுமதி சுமார் ஒரு கோடியே 44 இலட்சம் ரூபாவாகும்.

24 தங்க பிஸ்கட்டுக்களுடன் மூவர் கைது
படிக்க 1 நிமிடங்கள்