fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹேரத் இல்லாமல் இலங்கை அணி விளையாடுகிறது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 15, 2018 08:07

ஹேரத் இல்லாமல் இலங்கை அணி விளையாடுகிறது

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி நேற்று கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 285 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.குர்ரான் 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.தில்ருவான் பெரேரா 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.ரங்கன ஹேரத் கிரிக்கட்டுக்கு விடை கொடுத்திருக்கும் நிலையில் இலங்கை அணி இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது ஒரு விக்கட்டினை இழந்து 26 ஓட்டங்களை பெற்றிருந்தது.திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களை பெற்றுள்ளார்.ஜெக் லீச் ஒரு விக்கட்டினை வீழ்த்தினார்.

போட்டியின் 2ஆவது நாள் இன்றாகும். 1-0 எனும் அடிப்படையில் இங்கிலாந்து தொடரில் முன்னணி வகிக்கின்றது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 15, 2018 08:07

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க