fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அவுஸ்திரேலியாவில் ஸ்டோபரி பழங்களில் ஊசி

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 12, 2018 12:15

அவுஸ்திரேலியாவில் ஸ்டோபரி பழங்களில் ஊசி

அவுஸ்திரேலியாவில் ஸ்டோபரி பழங்களில் ஊசி இருந்தமை தொடர்பில் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர் 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. விரிவான விசாரணையின் பின்னர் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாசில் பல மாநிலங்களில் விற்பனைக்கென வைக்கப்பட்டிருந்த ஸ்டோபரி பழங்களில் ஊசியிருப்பது கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றுள் பல போலி முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து ஸ்டோபரி செய்கையில் ஈடுபட்டோர் டொன் கணக்கில் ஸ்டோபரி பழங்களை மண்ணில் புதைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் பல சந்தைகளில் ஸ்டோபரி பழ விற்பனை இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஸ்டோபரி பழங்களில் ஊசி இருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும்பட்சத்தில் குற்றவாளிகளுக்கு 10 தொடக்கம் 15 வருடகால சிறைத்தண்டனை விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 12, 2018 12:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க