fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 12, 2018 12:41

கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் `சர்கார்’.  படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறி தமிழகத்தில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை தீயிட்டு கொழுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் எதிரிப்பு கிளம்பியது.

இதையடுத்து படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழு நீக்கியதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.  அத்தோடு 6 நாட்களில் சர்கார் படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டியுள்ளது. இந்த நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு சந்திப்பு நடந்தது. இதில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது படக்குழு கேக் வெட்டி வெற்றியை கொண்டாடினர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 12, 2018 12:41

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க