fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சக்திமிக்க தலைவரின் கீழ் புதிய அரசாங்கத்தை உருவாக்க மக்களுக்கு வாய்ப்பு : முன்னாள் பாதுகாப்பு செயலாளர்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 11, 2018 15:27

சக்திமிக்க தலைவரின் கீழ் புதிய அரசாங்கத்தை உருவாக்க மக்களுக்கு வாய்ப்பு : முன்னாள் பாதுகாப்பு செயலாளர்

சக்திமிக்க தலைவரின் கீழ் புதிய அரசாங்கத்தை உருவாக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாப்ய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை புரிந்துகொள்ளாத சிலர் தேர்தலுக்கு செல்லும் விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றம் செல்ல முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஒருமுறை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றிப்பெறச்செய்து, நாட்டில் அன்று காணப்பட்ட பொருளாதார திட்டங்களை நடைமுறைப்படுத்த வாய்ப்பளிப்பதற்கு சரியான சந்தர்ப்பமெனவும் அவர் குறிப்பிட்டார். அன்று இராணுவத்தினரை பாதுகாத்ததை போன்று, சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கு கீழ்ப்படியாமல் செயற்பட்டது போன்று, செயற்பட மீண்டுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாப்ய ராஜபக்ஷ தெரிவித்தார். எளிய அமைப்பின் களுத்துறை மாவட்டத்துக்கான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கோட்டாப்ய ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டார்.

 

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 11, 2018 15:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க