fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வாகன விபத்துக்களில் இருவர் பலி

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 9, 2018 16:01

வாகன விபத்துக்களில் இருவர்  பலி

நாட்டில் இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். பொலன்னறுவை மற்றும் மஹவௌ பகுதிகளில் விபத்துக்கள் பதிவாகியுள்ளன. பொலன்னறுவை சுங்காவில் வீதியின் பலுகஸ்தமன பாலத்திற்கருகில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடு, ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 47 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை மாத்தளை – தம்புள்ள வீதியின் கொஹோலன்வல இராணுவ முகாமுக்கு அருகில் வேன் ஒன்றும், மோட்டார் சைக்கிளொன்றும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 53 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 9, 2018 16:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க