fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமுலை வளாக கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 9, 2018 14:57

கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமுலை வளாக கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமுலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழை காரணமாக பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மழைநீர் பல்கலைக்கழக வளாகம் மற்றும் விடுதிகளில் நிரம்பியுள்ளது. இதனால் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். தற்போது பரீட்சைகள் இடம்பெறும் நிலையில், மாணவர்களுக்கு உரிய நேரத்திற்கு சமூகம் தர முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூளை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் ஏ.பகிரதன் தெரிவித்துள்ளார். கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் தினம் பின்னர் அறிவிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 9, 2018 14:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க