டெல்லி நகரில் பட்டாசுகளை வெடித்த 310 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனுமதியின்றி பட்டாசுகளை கொளுத்தியுள்ளனர். டெல்லி நகரில் வளி மாசு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு பாவனையை குறைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இரு மணித்தியாலங்களுக்கு மாத்திரம் பட்டாசுகளை கொளுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதற்கு மேலதிகமாக பட்டாசுகளை கொளுத்த வேண்டாமென அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும் சில பகுதிகளில் தொடர்ச்சியாக பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. குறித்த நடவடிக்கையுடன் தொடர்புடைய நபர்களை பாதுகாப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். அவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கினறன.
டெல்லி நகரில் பட்டாசுகளை வெடித்த 310 பேர் கைது
படிக்க 0 நிமிடங்கள்