fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2018 15:03

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று மாலை இடம்பெறவுள்ளது. கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படும். சமகால அரசியல் நிலவரம் தொடர்பிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுமென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர், பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பில் சில மாற்றங்களை செய்வது தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது. கட்சி தலைவர், ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் பத்தரமுல்லை அபேகம வளாகத்தில் கூட்டம் இடம்பெறவுள்ளது. கட்சியின் போசகர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர், பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2018 15:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க