fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காத்தான்குடியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2018 15:40

காத்தான்குடியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி அன்வர் வட்டாரத்தை சேர்ந்த 39 வயதுடைய முஹம்மட் அனீஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.ஒரு சில நாட்களாக அந்த பகுதியில் கடும் மழை பெய்து வந்த நிலையில் அவரது வீடும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

வீட்டில் வைத்தே மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.இவர் சிறந்த சமூக செயற்பாட்டாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று இரவு, அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2018 15:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க