இந்தியாவுடனான உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென அமெரிக்கா தெரிவித்துள்ளது. இடைக்கால தேர்தலில் ஜனநாயக கட்சியின் பிரதிநிதி குழு அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. எனினும் அது வெளிநாட்டு கொள்கைக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாதென அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. நட்பு ரீதியான ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்லப்படுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.