மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பான யோசனையொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை நூற்றுக்கு 10 வீதத்தால் குறைப்பதற்கு அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சமுர்த்தி பயனாளிகள் மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கையும் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
படிக்க 0 நிமிடங்கள்