fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இடைக்கால தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 7, 2018 14:59

இடைக்கால தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி

அமெரிக்க இடைக்கால தேர்தலில் அந்நாட்டின் ஜனநாயக கட்சி வெற்றிபெற்றுள்ளது. அமெரிக்காவில் 435 பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் 35 செனட் சபை உறுபபினர்கள் மற்றும் 36 மாநில ஆளுநர் பதவிகளுக்கான தேர்தல் நேற்று இடம்பெற்றது. அமெரிக்க காங்கிரஸ் என அழைக்கப்படும் அமெரிக்க பாராளுமன்றம் செனட் சபை அதாவது மேலவை மற்றும் பிரதிநிதிகள் சபை அதாவது கீழவை என இரு பிரிவுகளை கொண்டது. இதில் செனட் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஆகவும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 435 ஆகவும் உள்ளது. இதில் பதவிக்காலம் முடிவடையும் 435 சபை உறுப்பினர்களுக்காக நேற்று தேர்தல் இடம்பெற்றது. குறிப்பாக பதவிக்காலம் முடிவடையும் 35 செனட் சபை உறுப்பினர்கள் தொகுதிகளிலும் 36 மாநில ஆளுநர் பதவிகளுக்குமே தேர்தல் இடம்பெற்றது. இத்தேர்லில் அமெரிக்க ஜனநாயக கட்சி பெரும்பான்மையை வெற்றிபெற்றுள்ளது. இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு விடப்பட்ட அபாய எச்சரிக்கை என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இத்தேர்தல் முடிவானது 2020 யில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்ததலில் தாக்கம் செலுத்துமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வேர்ஜினியா மற்றும் புளோரிடா மாநிலங்களை ஜனநாயக கட்சி இவ்விரண்டு மாநிலங்களும் முன்னர் டொனால்ட் ட்ரம்பின் குடியரசு கட்சியின் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தன. இத்தேர்தல் ஜனாதிபதி தேர்தலுக்கு இணையானதென அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை இன்டியான, டெக்ஸாஸ். டக்கோட்டா ஆகிய மாநிலங்களில் குடியரசு கட்சி வெற்றிபெற்றுள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 7, 2018 14:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க