fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சபாநாயகரின் அறிக்கை கவலையளிக்கின்றது- முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 7, 2018 10:32

சபாநாயகரின் அறிக்கை கவலையளிக்கின்றது- முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா

பாராளுமன்ற சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கையின் மூலம் பாராளுமன்றத்தில் அவருக்குள்ள பங்களிப்பின் சுதந்திரத்தன்மையை விட்டுக்கொடுத்துள்ளதுடன் அரசியலமைப்பு அதிகாரத்துக்கு மேலாகவும் அதற்கு அப்பாலும் சென்றுள்ளார் எனவும் அவ்வாறு சபாநாயகர் அறிக்கை விட்டது தனக்கு கவலையளிப்பதாகவும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போதைய சபாநாயகர் ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியலில் தெரிவானவர்.சபை உறுப்பினர்கள் அவரை சபாநாயகராக தெரிவு செய்தனர்.பாராளுமன்ற அமர்வின் போது சபையை  நடாத்திச்செல்வதே அவரது ஒரேயொரு பணி என்று அரசியல் அமைப்பு குறிப்பிடுகின்றது.அத்துடன் நடுநிலையான நபர் என்ற வகையில் செயற்படுகின்றார்.அவர்தான் நடுவர்.அதற்கப்பாலான பங்களிப்பு எதுவும் அவருக்கு இல்லை.நிறைவேற்று அதிகாரம் கொண்டமவர்களை ஜனாதிபதி நியமிக்கும் போது அதனை சபாநாயகர் அங்கீகரிக்க வேண்டும். என முன்னாள் நீதியரசர் மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 7, 2018 10:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க