இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்ளிட்ஸ் அவர்கள் நேற்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து சுமார் ஒரு மணி நேரம் எதிர்க்கட்சி தலைவர் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பில் அமெரிக்க தூதுவரோடு அமெரிக்க தூதரகத்தின் பிரதிபொறுப்பாளர் ரொபேர்ட்ஹில்டன் மற்றும் அரசியல் பிரிவின் பொறுப்பாளர் அந்தனிரென்சூலி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.