மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மின் உற்பத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தேசிய மின்கட்டமைப்புக்கு 25 மெகா வொட் மின்சாரம் இணைக்கப்படுவதாக மொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார். மின் உற்பத்தி மூலம் நாளொன்றுக்கு 40 இலட்சம் ரூபா வருமானமாக ஈட்டப்படுகிறது. வருடமொன்றுக்கு ஆயிரத்து 545 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மலையக பகுதியில் பெய்துவரும் தொடர்ச்சியான மழை காரணமாக மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. முழு நீர்த்தேக்கத்தின் 66 வீதமான பகுதி நீரில் நிரம்பியுள்ளதாக பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மின் உற்பத்தி பணிகள் ஆரம்பம்
படிக்க 0 நிமிடங்கள்