fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வேகத்தை காட்டும் கருவியில் கோளாறு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 6, 2018 15:13

வேகத்தை காட்டும் கருவியில் கோளாறு

இந்தோனேசியாவில் கடந்த வாரம் கடலுக்குள் மூழ்கி விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் வேகத்தை காட்டும் கருவி அதன் கடைசி நான்கு பயணங்களிலும் கோளாறாகவே இருந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானத்தின் வேகத்தை சுட்டிக்காட்டும் கருவியில் கோளாறு இருந்தது விமானத்தின் கருப்புப் பெட்டி மூலம் தெரியவந்துள்ளது.

லயன் ஏர் விமான சேவையின் ஜேடி 610 எண் விமானம் 189 பயணிகளுடன் இந்தோனீசிய தலைநகர் ஜகார்தாவிலிருந்து கிளம்பியவுடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

திங்களன்று நடந்த கூட்டத்தில் விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் இந்தோனீசிய அதிகாரிகளை விபத்து குறித்து கோபமாக பல கேள்விகளை கேட்டனர்.

அவர்கள் விமான விபத்துக்கான காரணங்களை அறிய விரும்பினர் மேலும் மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினர்.

இந்த விமான விபத்திற்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை.

கை குப்பி மன்னிப்பு

‘நாங்கள் இங்கு பாதிக்கப்பட்டுள்ளோம் நீங்கள் எங்கள் இடத்தில் இருப்பதுபோல் நினைத்து பாருங்கள்’ என்றார் நஜிப் புகோனி என்ற ஒரு உறவினர்

லயன் ஏர் விமான சேவையின் தலைவர் அந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

அவர் பேசவில்லை தனது கையை கூப்பி உறவினர்களின் முன் தலைகுனிந்து நின்றார்.

விமானி இயக்கும் வேகத்தை காட்டும் கருவி நம்பமுடியாத நிலையில் இருந்ததாகவும்இ உயரத்தை அளக்கும் கருவியில் தகவல்கள் விமானி மற்றும் இணை விமானிக்கு வெவ்வேறாக இருந்ததாகவும் பிபிசிக்கு கிடைத்த விமானத்தின் தொழில்நுட்பம் மற்றும் இயங்குமுறை குறித்த ஆரம்பகட்டத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஆனால் இந்தோனீசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு கமிட்டி விமானத்தின் இதற்கு முந்தைய இரண்டு பயணத்திலும் பிரச்சனைகள் இருந்ததாக தெரிவித்துள்ளது.

அவர்கள் இயந்திர கோளாறால் விபத்து நேர்ந்ததா அல்லது முறையற்ற பராமரிப்புகள் அல்லது வேகத்தை காட்டும் கருவியில் ஏற்பட்ட கோளாறால் ஏற்பட்டதா என்பது குறித்து கூறவில்லை.

bbc

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 6, 2018 15:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க