fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையில் விசேட பேச்சுவார்த்தை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 6, 2018 13:29

அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையில் விசேட பேச்சுவார்த்தை

அமெரிக்காவுக்கும், சீனாவுக்குமிடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூதரக மற்றும் பாதுகாப்பு மட்டத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. சிரேஷ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெறும். இருநாடுகளுக்கிடையில் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டன. வர்த்த செயற்பாடுகளின்போது வரி அதிகரிக்கப்பட்டமையே இதற்கு பிரதான காரணமாகும். பல்வேறு தரப்பினர் இது தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இதேவேளை அரசியல் மற்றும் சர்வதேச ரீதியில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படுமென அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 6, 2018 13:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க