fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தடைகள் நீக்கப்படாவிடின் மீண்டும் அணுவாயுத சோதனை : வடகொரியா எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 4, 2018 16:18

தடைகள் நீக்கப்படாவிடின் மீண்டும் அணுவாயுத சோதனை : வடகொரியா எச்சரிக்கை

தம் மீதான சர்வதேச தடைகளை நீக்காவிட்டால் அணுவாயுத சோதனையை மீண்டும் தொடரவேண்டி ஏற்படுமென வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது அணுவாயுத சோதனை மற்றும் தயாரிப்பை வடகொரியா கைவிட்டுள்ளது. அண்மையில் சிங்கப்பூரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பேச்சுவார்த்தையின் போது அணுவாயுத சோதனை நடவடிக்கையை கைவிட ஒப்புக்கொண்ட வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் அதற்கு பதிலாக தனது நாட்டின் மீதான பொருளாதார தடைகளை நீக்குமாறு அமெரிக்காவிடம் கோரிக்கைவிடுத்தார். குறித்த கோரிக்கையை அமெரிக்க ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் கோரிக்கை நடைமுறைக்கு வரவில்லையென வடகொரியா தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பான எவ்வித நடவடிக்கைகளையும் அமெரிக்க மேற்கொள்ளவில்லையெனவும் வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள வடகொரியா தம்மீதான பொருளாதார தடையை நீக்காத சந்தர்ப்பத்தில் மீண்டும் அணுவாயுத பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 4, 2018 16:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க