fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் அமைச்சரவை பத்திரம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 4, 2018 15:11

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் அமைச்சரவை பத்திரம்

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கவுள்ளதாக மலையக புதிய கிராமங்கள் அடிப்படை வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தியமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பிரதமருடனும் கலந்துரையாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னுடனும், இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேசுடனும் கலந்துரையாடுமாறு நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார். தோட்டக் கம்பனிகள் மற்றும் தோட்டத்தொழிலாளர்களின் கருத்துக்களை ஆராய்ந்து தீர்க்கமான முடிவொன்றை எட்டவுள்ளதாகவும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 4, 2018 15:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo