ஹெரோயின் மற்றும் கொக்கெய்ன் போதைப்பொருட்களுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மத்திய கொழும்பு சட்ட அமுலாக்க பிரிவினல் மருதானை பிரதேசத்தில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே அவர் கைதாகியுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 100 கிரேம் 970 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 16 கிரேம் கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றபபட்டுள்ளது. அவரை மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.