fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொத்துஹெர ரயில் நிலையத்தின் செயற்பாடுகள் வழமை நிலைக்கு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 1, 2018 11:38

பொத்துஹெர ரயில் நிலையத்தின் செயற்பாடுகள் வழமை நிலைக்கு

பொத்துஹெர ரயில் நிலையத்தின் செயற்பாடுகள் வழமை நிலைக்கு திரும்பியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் நேரடிய தலையீட்டில் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பிரதமர் மற்றும் போக்குவரத்து அமைச்சரின் நிலைப்பாட்டை தெரிவித்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பொத்துஹெர ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குழப்பநிலையினால் வடக்குக்கான ரயில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டன. கொழும்பு முதல், குருநாகல் வரை பயணிக்கும் அலுவலக ரயில், பொத்துஹெர ரயில் நிலையத்தில் தாமதமாக பயணத்தை ஆரம்பித்தமையே குழப்பம் ஏற்பட்டமைக்கான காரணமாகும்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 1, 2018 11:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க