முச்சக்கர வண்டி கட்டணம் இன்று முதல் குறைக்கப்படுமென அகில இலங்கை முச்சக்கரவண்டி தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்தை ரத்து செய்வதற்கு புதிய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை வரவேற்கும் முகமாக முச்சக்கர வண்டி கட்டணம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து அறவிடப்படும் கட்டணம் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட, குறித்த கட்டணம் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணமாக 50 ரூபாய் அறவிடப்பட்டது. எனினும் இன்று முதல் குறித்த கட்டணம் 45 ரூபாவாக காணப்படுமென அகில இலங்கை முச்சக்கரவண்டி தொழிற்சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.