fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 1, 2018 09:36

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை

மலையக தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தையொன்று இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்கள் தங்களது அடிப்படை நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறித்த பிரச்சினைக்கு இன்றைய பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படுமென எதிர்ப்பார்க்கப்படுவதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். இதேவேளை பேச்சுவார்த்தையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், தோட்ட கம்பனிகள், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 1, 2018 09:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க