ஊருபொக்க பகுதியில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் தேடப்பட்ட சந்தேகநபர்கள் கைது

ஊருபொக்க பகுதியில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் தேடப்பட்ட சந்தேகநபர்கள் கைது 0

🕔10:38, 31.அக் 2018

ஊருபொக்க பகுதியில் இடம்பெற்ற மனித படுகொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 20ம் திகதி ஊருபொக்க அக்குரஸ்ஸவத்த வலஸ்முல்ல பகுதியில் துப்பாக்கியொன்றால் சுடப்பட்டு நபரொருவர் கொலைசெய்யப்பட்டார். கொலைச் சந்தேகநபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கி, ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபரை இன்று மொரவக்க

Read Full Article
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நாளை

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நாளை 0

🕔10:26, 31.அக் 2018

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை கூடவுள்ளதாக தெரியவருகிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் இங்கு முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

Read Full Article
இலங்கை – பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்டோருக்கு இடையிலான 1வது ஒருநாள் போட்டி இன்று

இலங்கை – பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்டோருக்கு இடையிலான 1வது ஒருநாள் போட்டி இன்று 0

🕔11:28, 30.அக் 2018

இலங்கை – பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்டோருக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. ரங்கிரி தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் போட்டிக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Read Full Article
எல்லையில் 5 ஆயிரத்து 200க்கும் அதிகமான படைவீரர்களை பணியில் அமர்த்த அமெரிக்கா நடவடிக்கை

எல்லையில் 5 ஆயிரத்து 200க்கும் அதிகமான படைவீரர்களை பணியில் அமர்த்த அமெரிக்கா நடவடிக்கை 0

🕔11:27, 30.அக் 2018

எல்லைப்பகுதியில் 5 ஆயிரத்து 200க்கும் அதிகமான படைவீரர்களை பணியில் அமர்த்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டுக்குள் குடியேற்றவாசிகள் நுழைவதை தடுக்கும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க எல்லைப்பகுதியிலிருந்து ஆயிரத்து 500 கிலோமீற்றர் தூரத்தில் குடியேற்றவாசிகள் தங்கியுள்ளதாக பி.பி.சி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Read Full Article
அனைத்து பங்கு விலைச்சுட்டெண்களும் அதிகரிப்பு

அனைத்து பங்கு விலைச்சுட்டெண்களும் அதிகரிப்பு 0

🕔11:09, 30.அக் 2018

கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் அனைத்து பங்கு விலைச்சுட்டெண்களும் அதிகரிப்பை காட்டியுள்ளன. இன்றையதினத்தில் விலைச்சுட்டெண் 112 புள்ளிகளால் அதிகரித்து 5 ஆயிரத்து 944 புள்ளிகளை தாண்டியுள்ளது. இது 5 வருடங்களின் பின்னர் நாளொன்றில் பதிவாகியுள்ள ஆகக்கூடிய வளர்ச்சியாகும். இதேவேளை நேற்றையதினம் கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தில் 400 கோடி ரூபாவுக்கும் அதிகமான விற்பனை புரழ்வு பதிவாகியுள்ளமை

Read Full Article
நியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு

நியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு 0

🕔11:08, 30.அக் 2018

நியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. நாட்டின் வட பகுதியிலேயே நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்க பூகோள ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலஅதிர்வால் சுனாமி அவதான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இதேவேளை ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சொத்து சேதங்கள் தொடர்பிலும் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read Full Article
வாகன விபத்தில் ஒருவர் பலி

வாகன விபத்தில் ஒருவர் பலி 0

🕔11:03, 30.அக் 2018

அம்பாறை வடினாகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எம்பயூலெனஸ் வண்டியொன்று லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் எம்பியூலென்ஸ் வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார். உதவியாளர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நோயாளியொருவரை அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற சம்பவத்திலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

Read Full Article
தாமரைப்பூ பறிக்கச்சென்ற நபரொருவர் நீரில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்

தாமரைப்பூ பறிக்கச்சென்ற நபரொருவர் நீரில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார் 0

🕔11:03, 30.அக் 2018

மாரவில பகுதியில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற நபரொருவர் நீரில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். தாமரைப்பூ பறித்து விற்பனை செய்துவரும் 47 வயதான குறித்த நபர் ஹால்பன்வில ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அவருக்கு மரண பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
இடியுடன் கூடிய மழை

இடியுடன் கூடிய மழை 0

🕔11:00, 30.அக் 2018

இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்தி, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Read Full Article
நாட்டின் அரசியல் நிலை தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது

நாட்டின் அரசியல் நிலை தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது 0

🕔11:00, 30.அக் 2018

நாட்டின் அரசியல் நிலை தொடர்பில் அனைத்து வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட சந்திப்பொன்று நேற்றையதினம் இடம்பெற்றதாக அரச ஊடகப்பேச்சாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Read Full Article

Default