fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யெமனில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை நிறுத்தவும் : அமெரிக்கா

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 31, 2018 13:16

யெமனில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை நிறுத்தவும் : அமெரிக்கா

யெமனில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை நிறுத்துமாறு அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக்பாம்பியோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கவனம் செலுத்துமாறு அரபுநாடுகளுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். யெமனில் தாக்குதல்களை மேற்கொள்ளும் ஈரான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் யேமனில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் தொடர்பில் எதிர்வரும் மாதங்களில் ஐக்கிய நாடுகள் சபையில் பேச்சுவார்த்தையை ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையில் இடம்பெற்றுவரும் குறித்த போரில் அதிகளவான அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை தாக்குதல்கள் காரணமாக அதிகளவான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன், உணவுத் தட்டுப்பாட்டு மற்றும் நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 31, 2018 13:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க