fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதியும் பிரதமரும் சமய கிரியைகளில் ஈடுபட்டனர்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 29, 2018 16:43

ஜனாதிபதியும் பிரதமரும் சமய கிரியைகளில் ஈடுபட்டனர்

தேசிய ஏர்பூட்டு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று திஸ்ஸமஹாராம சந்தகிரிகொட வயல்வெளியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் திஸ்ஸமஹாராம விகாரைக்குச் சென்று சமய கிரியைகளில் ஈடுபட்டனர்.

திஸ்ஸமஹாராம ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய தேவாலேகம தம்மசேன நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் பிரித் பாராயணம் செய்து ஆசீர்வதித்தனர்.

சமல் ராஜபக்ஷ், மஹிந்த அமரவீர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 29, 2018 16:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க