fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மண்சரிவு அபாயம்-அவதானத்துடன் இருக்கவும்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 28, 2018 16:41

மண்சரிவு அபாயம்-அவதானத்துடன் இருக்கவும்

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, மண்சரிவு ஆபத்துள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

பதுளை மாவட்டத்திற்காக விடுக்கப்பட்டிருந்த இந்த மண்சரிவு ஆபத்து எச்சரிக்கை நீக்கப்பட்டிருப்பதாக அதன் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

எனினும், நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, பலாங்கொடை ஆகிய பிரதேசங்களுக்காக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு ஆபத்து எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

ஆறுகளின் நீர்மட்டம் ஆபத்தான மட்டத்தில் இல்லை என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 28, 2018 16:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க