fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சவூதி மற்றும் துருக்கிக்கு இடையேயான உறவில் சிக்கல்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 28, 2018 12:11

சவூதி மற்றும் துருக்கிக்கு இடையேயான  உறவில் சிக்கல்

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது சவூதி மற்றும் துருக்கிக்கு இடையேயான உறவை சிக்கலாக்கியுள்ளது.

சவூதி அரசுடன் அரசியல் மற்றும் தொழில் ரீதியாக நெருக்கமாக உள்ள மேற்கத்திய அரசாங்கங்களுக்குஇ குறிப்பாக அமெரிக்காவுக்கு இந்த பிரச்சனை ஒரு தலைவலி ஆகியுள்ளது.

அமெரிக்க – சவூதி உறவுகளை அடிப்படையாக மறுபரிசீலனை செய்வதற்கு சௌதி வல்லுநர்களுடன் இணைந்து அமெரிக்க அதிகார மையத்தின் மூத்த நபர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில் கஷோக்ஜி கொலை குறித்து அவர் எந்த சூழலில் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் எங்கே முக்கியமாக இந்த கொலையை செய்ய உத்தரவிட்டது யார் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் வரவேண்டி உள்ளது.

கஷோக்ஜியை கொலை செய்ய வேண்டும் என்ற உத்தரவு சௌதியின் இளவரசர் முகமது பின் சல்மானிடம் இருந்தே வந்துள்ளதாக இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்கள் கூறுகின்றன.

சல்மான்தான் சவூதி ராஜ்ஜியத்தின் பல்வேறு அதிகாரங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார். இந்த கொலை தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்டுள்ள பலரும் அவருக்கு கீழ் வேலை செய்பவர்களே. இளவரசர் சல்மான் உத்தரவு இல்லாமல் இவ்வளவு பெரிய சம்பவம் நடைபெற வாய்ப்பே இல்லை என சௌதி வல்லுநர்கள் நம்புகின்றனர்.

BBC Tamil

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 28, 2018 12:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க