பிரதமரின் புதிய செயலாளராக எஸ்.அமரசேகர நியமனம்
Related Articles
பிரதமரின் புதிய செயலாளராக எஸ்.அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அரசியல் அமைப்பின் 51 (1) ம் இலக்க சரத்துக்கமைய ஜனாதிபதியினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.அமரசேகர கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியில் பிரதமரின் செயலாளராக செயற்பட்டுவந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.