fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதிய அமைச்சரவை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 27, 2018 15:34

புதிய அமைச்சரவை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல்

புதிய அமைச்சரவையை அமைப்பது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் விஜயராம வாசஸ்தலத்தில் தற்போது கலந்துரையாடல் இடம்பெறுகிறது. கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை பாராளுமன்றம் சிறிது காலத்திற்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படவுள்ளதாக கலந்துரையாடலில் கலந்துகொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தை ஒத்திவைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் வெளியிடப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குறிப்பிட்டார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமொன்றை அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 27, 2018 15:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க