பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமராக நியமிக்கப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரட்ன விசேட வர்த்தமானியில் கையெழுத்திட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள அறிவித்தல் அடங்கிய வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் யாப்பின் 42வது சரத்தின் 4 பிரிவுக்கமைய தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
புதிய பிரதமரை நியமிக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு
படிக்க 0 நிமிடங்கள்