Life+News The Official News Portal of Independent Television Network Ltd

276 மில்லியன் மக்கள் நாளாந்தம் 100 இந்திய ரூபாக்களையே உழைக்கின்றனர்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 26, 2018 14:52

276 மில்லியன் மக்கள் நாளாந்தம் 100 இந்திய ரூபாக்களையே உழைக்கின்றனர்

இந்தியாவின் முழு சனத்தொகையிலும் 276 மில்லியன் மக்கள் நாளாந்தம் 100 இந்திய ரூபாக்களையே உழைக்கின்றனர். இந்நிலைமையின் கீழ் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் நடைபெறவுள்ள பொது தேர்தலை இலக்காக கொண்டு 120 பில்லியன் ரூபாவை வறியவர்களுக்கு என ஒதுக்குவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தீர்மானித்துள்ளார். நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக 2004ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டின் மே மாதம் அளவில் இவருக்கு அடுத்த தேர்தலை எதிர்நோக்க வேண்டியுள்ளது, இதற்கென மோடியின் அரசாங்கம் வீடமைப்பு திட்டங்களையும் பாரிய சுற்றாடல் பாதுகாப்பு திட்டங்களையும் இதற்கு முன்னர் ஆரம்பித்தது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக வறியவர்களுக்கு என சுகாதார வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு 120 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு தயாராகி வருகின்றார். குறைந்த வருமானம் பெறும் 100 மில்லியன் குடும்பங்களை இலக்காக கொண்டு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு நரேந்திரி மோடி தனிப்பட்ட ரீதியில் தலையிட போவதாக என்.டீ.ரி.வி செய்தி சேவை அறிவித்துள்ளது. உலகில் மிகப்பெரிய சுகாதார மேம்பாட்டு நிகழ்ச்சி திட்டம் இதுவென மோடி அரசாங்கத்தின் கொள்கை வகுப்பு பணியகத்தின் உறுப்பினரான வினோத் கேபோல் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்திய சனத்தொகையில் 40 சதவீதமானோர் உள்ளடக்கப்படுவர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயுஷ்மன் பாரத் என இத்திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் இந்தியாவின் 29 மாகாணங்களில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதன் மூலம் இன மத குல பேதங்களாக பிளவுப்பட்டு சுகாதார வசதிகளை வழங்கும் முறையை முழுமையாக மாற்றியமைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் வினோத் கேபோல் வலியுறுத்தியுள்ளார். ஆரம்ப கட்டத்தில் ஐந்து இலட்சம் புதிய தொழில்வாய்ப்புக்கள் உருவாகுவதாகவும் சவால்களை வெற்றிக்கொள்வதே மோடி அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் என்.டீ.ரி.வி செய்தி சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 26, 2018 14:52
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க