fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற டுவைன் ப்ராவோ தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 25, 2018 13:16

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற டுவைன் ப்ராவோ தீர்மானம்

மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலத்துறை வீரர் டுவைன் ப்ராவோ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். 35 வயதான டுவைன் ப்ராவோ 40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒருநாள் போட்டிகள் மற்றும் 66 டுவண்டி – 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தனது பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் மிகச்சிறந்த திறமையை வெளிக்காட்டி அவ்வணியின் பல்வேறு வெற்றிகளுக்கு வழிவகுத்தவர். இந்நிலையில் தான் முன்னைய தலைமுறைகளை பின்பற்றி, அடுத்த தலைமுறைக்கு வழிவிடும் வகையில் சகலவிதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக டுவைன் ப்ராவோ அறிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 25, 2018 13:16

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க