fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விமான நிலையத்தில் மாணிக்க கற்கள் கைப்பற்றப்பட்டது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 25, 2018 12:50

விமான நிலையத்தில் மாணிக்க கற்கள் கைப்பற்றப்பட்டது

சட்டவிரோதமாக இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட ஒரு தொகை மாணிக்க கற்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டன.

சட்டவிரோதமாக ருவன்டாவில் இருந்து தோஹா கட்டார் ஊடாக இலங்கைக்கு வருகை தந்த விமான பயணி ஒருவரிடம் இருந்தே விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவற்றை கைப்பற்றினர். கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கியூ.ஆர் 407 என்ற விமானத்தில் இவர் வருகை தந்துள்ளார். தனது உடம்பின் அந்தரங்க பகுதிகளில் இவற்றை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார். 4 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த மாணிக்க கற்கள் 329 கரட் நிறையுடையவை. பல வகையான மாணிக்க கற்கள் இவரிடம் இருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தேகநபர் பேருவளை பகுதியை வசிப்பிடமாக கொண்ட மாணிக்க கல் வர்த்தகர் ஆவார். மாணிக்க கற்கள் அரசுடைமையாக்கப்பட்டன.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 25, 2018 12:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க