fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அங்குணுகொலபெலஸ்ஸ சிறையில் எதிர்ப்பில் ஈடுபட்ட கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 25, 2018 10:27

அங்குணுகொலபெலஸ்ஸ சிறையில் எதிர்ப்பில் ஈடுபட்ட கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 8 சிறைக்கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிறைச்சாலையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை அங்கிருந்து வெளியேற்றுமாறு கோரி அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, 8 சிறைக்கைதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, வேறு சிறைச்சாலைகளுக்கு தம்மை மாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அவர்கள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறித்த 8 கைதிகளும் களுத்துறை, குருவிட்ட, காலி, மாத்தறை மற்றும் மொனராகலை, ஆகிய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 25, 2018 10:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க