fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மறு அறிவித்தல் வரை தென் கிழக்கு பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 24, 2018 14:45

மறு அறிவித்தல் வரை தென் கிழக்கு பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது

தென் கிழக்கு பல்கலைக்கழகம் இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாகவும் பல்கலையின் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பல்கலையின் பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தெரிவித்தார்.

தென் கிழக்கு பல்கலை நிர்வாக கட்டடத்தை கடந்த இரண்டு வார காலமாக அந்த பல்கலைக்கழகத்தின் தகவல் தொழிநுட்ப பீடத்தை சேர்ந்த மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளமையின் காரணமாகவே மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளது.இந்த நிலையில் பல்கலைக்கழகத்திலும் அங்குள்ள விடுதிகளிலும் தங்கியுள்ள அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 4 மணிக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறுமாறு பல்கலை நஜர்வாகம் அறிவித்துள்ளது.இந்த உத்தரவினை மீறி பல்கலைக்கழகத்தினுள் தங்கியிருப்பது சட்டவிரோதமாக கருதப்படும் எனவும் தென்கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.

 

 

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 24, 2018 14:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க