fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இடியுடன் கூடிய மழை பொழியலாம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 24, 2018 12:45

இடியுடன் கூடிய மழை பொழியலாம்

இலங்கையின் தென் மேற்கு பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படுவதுடன் நாட்டின அதிகமான பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாமென காணப்படும்.குறிப்பாக மேற்கு, மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியை விட அதிகமான மழை வீழ்ச்சி காணப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் காற்றும் பலமானதாக வீசும்.நாட்டின் வடக்கு. வட மேற்கு. மேற்கு. தெற்கு கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படுவதுடன் ஏனைய கடல் பிராந்தியங்களில் மாலை வேளைகளில் அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 20-30 கிலோ மீட்டர் வேகத்தில் திருகோணமலை முதல் காங்கேசன்துரை ஊடாக மன்னார் வரையான கடல் பிராந்தியங்களில் வட கிழக்கு திசையிலிருந்தும் ஏனைய கடல் பிராந்தியங்களில் மாறுபட்ட திசைகளிலிருந்தும் காற்று வீசும்.கடல் பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கடல் கொந்தளிப்பாகவும் காணப்படுமென வளிமண்டல திணைக்கள அதிகாரி சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 24, 2018 12:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க