Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இங்கிலாந்துக்கெதிராக அசத்திய இலங்கை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 24, 2018 10:17

இங்கிலாந்துக்கெதிராக அசத்திய இலங்கை

இலங்கை எதிர் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நேற்று இடம்பெற்ற 5 ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி சிறியதொரு இடைவேளையின் பின்னர் மிகப்பெரும் வெற்றயொன்றினை பெற்றுக்கொண்டது.

நேற்று ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடியது.50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 366 ஓட்டங்களை பெற்றது.

நிரோஷன் திக்வெல்ல 95 ஓட்டங்களையும் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் 80 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்துவீச்சில் குரான் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து 26.1 ஓவர்களில் 9 விக்கட்டக்ககைள இழந்து 132 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் கடும் மழை காரணமாக போட்டி இடை நிறுத்தப்பட்டது.பென் ஸ்டோர்க்ஸ் 67ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.துஷ்மந்த சமீர 3 விக்கட்டுக்களையும் அகில தனஞ்சய 4 விக்கட்டுக்களையும் கைப்பற்றி பந்து வீச்சில் அசத்தினர்.இதனடிப்படையில் இலங்கை அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 219 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.போட்டியின் ஆட்டநாயகனாக நிரோஷன் திக்வெல்லவும் போட்டி தொடர் நாயகனாக ஒயின் மோகனும் தெரிவானார்கள்.

இருந்தாலும் இந்த ஒருநாள் போட்டி தொடரை 3-1 எனும் அடிப்படையில் தனதாக்கிக்கொண்டது.

இரு அணிகளுக்கிடையிலுமான T-20 போட்டி எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 24, 2018 10:17
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க