fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தலவாக்கலை டெஸ்போர்ட் ஊடாக நுவரெலியா வரையான போக்குவரத்து தடை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 23, 2018 11:37

தலவாக்கலை டெஸ்போர்ட் ஊடாக நுவரெலியா வரையான போக்குவரத்து தடை

தலவாக்கலை டெஸ்போர்ட் ஊடாக நுவரெலியா வரையான ஏ-7 வீதியின் போக்குவரத்து முற்றாக கைவிடப்பட்டுள்ளது. அதிக மழை காரணமாக நுவரெலியா மற்றும் நானுஓயா பிரதேசங்களுக்கிடையில் பிரதான வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையே இதற்கு காரணமாகும். சரிந்து வீழ்ந்த மண்மேட்டின் ஒரு பகுதி மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீரை கொண்டுசெல்லும் கிரிமெட்டி ஓயவில் கலந்துள்ளது. இந்நிலையில் பிரதான வீதியினூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் நானுஓயா, தங்காலை, எல்ஜின், மெராயா மற்றும் ஊவக்கலை பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 23, 2018 11:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க