fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹட்டன் – பொகவந்தலாவை வீதிக்கு பதிலாக தற்காலிக வீதி அமைக்கும் பணிகள் முன்னெடுப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 23, 2018 11:00

ஹட்டன் – பொகவந்தலாவை வீதிக்கு பதிலாக தற்காலிக வீதி அமைக்கும் பணிகள் முன்னெடுப்பு

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதிக்கு பதிலாக தற்காலிக வீதியொன்றை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வீதி அபிவிருத்தி அதிகார சபை வீதியை நிர்மாணிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. பொகவந்தலாவை பிரதான வீதியில் நோர்வூட் நிவ்வெலிகம பிரதேசத்தில் ஒரு பகுதி மண்சரிவுக்கு உள்ளாகி காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மூழ்கியது. இதனையடுத்து குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகளவானோர் குறித்த வீதியை பயன்படுத்தக்கூடுமென்பதால் வீதி நிர்மாணப்பணிகளை துரிதமாக முன்னெடுக்கவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 23, 2018 11:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க