fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அங்குணுகொலபெலஸ சிறைக்ககைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 22, 2018 14:29

அங்குணுகொலபெலஸ சிறைக்ககைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைக்ககைதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது. சிறைச்சாலைகளில் பயன்படுத்தப்படும் போதை பொருள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குணுகொலபெலஸ சிறை கைதிகளினால் ஆரம்பிக்கப்பட்;ட ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

நேற்று முதல் அங்குனுகொலபெலஸ சிறைச்சாலையில் உள்ள கோபுரம் ஒன்றில் ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் நூறு கைதிகள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கைதிகளுக்கு வழங்குவதற்காக சிறைச்சாலைகளுக்கு எடுத்துவரப்படும் உணவு மற்றும் ஏனைய பொருட்கள் விசேட அதிரடிப்படையினரின் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சிறைககைதிகள் அகுனுகொலபெலஸ சிறைச்சாலை அத்தியட்சகரை இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை நாளை முதல் வெலிக்கடை சிறையில் விசேட அதிரடிப்படையினரை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 22, 2018 14:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க