fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்றைய வானிலை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 22, 2018 11:47

இன்றைய வானிலை

நாட்டில் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் குறிப்பாக மத்திய, ஊவா , சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாறை , மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது குறித்த பகுதிகளில் காற்று வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களை திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 22, 2018 11:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க