சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தெலுங்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நானி நடிக்கிறார். திரிஷா நடித்த ஜானு கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து சமந்தா தெரிவிக்கையில் ; கண்டிப்பாக மறுஉருவாக்கம் செய்யக் கூடாது என்று கூறியுள்ளார். முன்னதாக 96 படத்தை பார்த்த சமந்தா, திரிஷாவை குறிப்பிட்டு “என்ன ஓர் அற்புதமான நடிப்பு. ரொம்பவே வித்தியாசமான கதாபாத்திரமான இதில் அற்புதமான தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளீர்கள்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.