ரஷ்யாவுடனான அணுவாயுத உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஒப்பந்த மீறல் காரணமாக குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்திலிருந்து ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையில் அணுவாயுதம் தொடர்பான இணக்கப்பாடு காணப்பட்டது. எனினும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ரஷ்யா ஒப்பந்தத்தை மீறியதாக ஜனாதிபதி ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.