fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்திய இலங்கை பிரதமர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை வெற்றி

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 20, 2018 18:23

இந்திய இலங்கை பிரதமர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை வெற்றி

இந்திய இலங்கை நெருங்கிய உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் இலங்கைக்கு பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கான உதவிகளை தொடர்ந்தும் வழங்க போவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நீண்டகால தொடர்புகள் உள்ளன. அந்த வரலாற்று சிறப்பு மிக்க உறவுகளை பலப்படுத்தும் மற்றொரு முயற்சியாக இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டார். இவ்விஜயத்தின் மூன்றாம் நாளான இன்றைய தினம் விசேட நாளாகும். இன்றைய தினம் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் வெற்றிகரமான சந்திப்பொன்று இடம்பெற்றது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நிலவும் நட்புறவை மேலும் பலப்படுத்தும் வகையில் இலங்கையின் பொருளதார வளர்ச்சிக்கு இந்திய அரசாங்கம் போதிய பங்களிப்பை வழங்கும் என இந்திய பிரதமர் இலங்கை பிரதமரிடம் தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்தும் வகையில் இன்றைய விஜயத்தை நிறைவு செய்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடு திரும்பவுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 20, 2018 18:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க