மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரியொருவர் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது
Related Articles
மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் வெலிகந்த – சிங்ஹ பூர் பிரிவு அதிகாரியொருவர் இலஞ்ச குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 20 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முற்பட்ட சந்தர்ப்பத்தில் அவரை கைதுசெய்ததாக இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வெலிகந்த பிரதேசத்தை சேர்ந்த நபரொருவருக்கு, மகாவலி அபிவருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணிக்கு தேவையான அனுமதிப்பத்திரத்தை தயாரித்து வழங்குவதற்கும், அதற்கு தேவையான பரிந்துரைகளை பெற்றுக்கொடுப்பதற்கும் இலஞ்ச பணத்தை கோரியுள்ளார். இதற்கமைய அலுவலகத்திற்குள் வைத்து பணத்தை பெறும் சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.