fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

141வது மற்றும் 142 வது மாதிரி கிராமங்கள் இன்றைய தினம் கையளிப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 20, 2018 14:13

141வது மற்றும் 142 வது மாதிரி கிராமங்கள் இன்றைய தினம் கையளிப்பு

141வது மற்றும் 142 வது மாதிரி கிராமங்கள் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளன. அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இது தொடர்பான நிகழ்வுகள் இடம்பெறும். மட்டக்களப்பு மண்முனை வடக்கு கொக்குவில் பகுதியில் புதிய கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. விழுது நகர் மற்றும் சுபீட்சம் நகர் என பெயரிடப்பட்டுள்ள குறித்த கிராமங்களில் 43 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதேவேளை 350 பேருக்கு கடன் காசோலைகளும் வழங்கப்படவுள்ளன. நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 20, 2018 14:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க