எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் பலி
Related Articles
எம்பிலிப்பிட்டிய – இரத்தினபுரி வீதியின் கொடகவல – பலவின்ன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரியிலிருந்து, எம்பிலிப்பிட்டிய நோக்கி பயணித்த லொறியொன்று, எதிர்த்திசையில் வருகைத்தந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த மூன்று பெண்கள் பல்லேபெத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது இரு பெண்கள் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் பெண்ணொருவர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.