ஆப்கானிஸ்தான் பொதுத்தேர்தல் இன்று இடம்பெறுகிறது. இரண்டாயிரத்து 450 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அந்நாட்டு பாராளுமன்றத்தின் 250 ஆசனங்களுக்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளதாக ஆப்கானிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. 34 மாநிலங்களில், 19 ஆயிரம் மத்திய நிலையங்களில் வாக்குப்பதிவுகள் இடம்பெறுகின்றன. 8.8 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர். தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்ற அச்சத்தின் மத்தியில் பொதுத்தேர்தல் இடம்பெறுகிறது. தேர்தல் மத்திய நிலையங்களை சூழவுள்ள பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.